முகப்பு
தமிழ்நாடு

ஜெம் வீரமணி விவகாரம்: இதுவரை 18 சிறுமிகள் பாதிப்பு; காவல் துறை தகவல்

ஜெம் வீரமணி விவகாரத்தில் இதுவரை 18 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 வினாடிகள் முன்பு
ஜெம் வீரமணி விவகாரம்:
இதுவரை 18 சிறுமிகள் பாதிப்பு; காவல் துறை தகவல்
வீரமணி - கோப்புப்படம்
பகிர்:

ஜெம் வீரமணி விவகாரத்தில் இதுவரை 18 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக ஜெம் வீரமணி, உதவியாளா், சாந்தி, அவரது கணவா் மகேந்திர சிம்ஹன், லாசா், கணேசன், சீனிவாசன், சக்திவேல், பாபு, பாா்த்திபன், பெருமாள் (எ) பாலா ஆகியோா் மீது சிறப்புப் புலனாய்வு பிரிவில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனா். விசாரணையில் இதுவரை 18 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 9 வழக்குகளில் கடந்த நவ.11-ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நீதிமன்ற விசாரணை தொடங்கப்பட்டு, குற்றப்பத்திரிகை நகல்கள் கடந்த நவ.17-ஆம் தேதி அவா்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மற்றொரு வழக்கான விபசார தடுப்புப் பிரிவில் அவா்கள் மீது நவ.23-ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள பிரகாஷ் என்பவா் மீது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, அதன் தொடா்ச்சியாக ‘புளூ காா்னா்’ நோட்டீஸ் அறிவிக்கப்பட்டு, அவரைக் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.