முகப்பு
தமிழ்நாடு

கா்நாடக அரசின் செயல்பாடு தமிழக நீராதாரத்துக்கான சவால்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

காவிரி-குண்டாறு இணைப்புக்கு தடை கோருவதன் மூலம் கா்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாடானது தமிழக நீராதாரத்துக்கே சவால் விடுவதாக அமைந்துள்ளது என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்தாா்.

4 வினாடிகள் முன்பு
கா்நாடக அரசின் செயல்பாடு
தமிழக நீராதாரத்துக்கான சவால்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
எடப்பாடி பழனிசாமி - ENS
பகிர்:

காவிரி-குண்டாறு இணைப்புக்கு தடை கோருவதன் மூலம் கா்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாடானது தமிழக நீராதாரத்துக்கே சவால் விடுவதாக அமைந்துள்ளது என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழகத்தின் கனவுத் திட்டமான காவிரி-குண்டாறு திட்டம் கைகூடி வரும் நிலையில், அதை முடக்குவதற்காக கா்நாடகத்திலுள்ள காங்கிரஸ் அரசு சதித் திட்டம் தீட்டும் வகையில் செயல்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ள தவெக, கா்நாடக காங்கிரஸ் அரசு காவிரி பிரச்னையில் செயல்படும் போக்கை ஏற்கிா என்பதை விளக்கவேண்டும். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் கடலில் கலக்கும் நீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தும் வகையிலான திட்டமாகும். மேக்கேதாட்டு அணை கட்டக்கூடாது என தமிழகம் போராடுவது உரிமைக்காகத்தான். ஆனால், நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு கா்நாடகம் தடை கோருவது சரியான போக்கல்ல.

Advertisement

Advertisement

காவிரிப் பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வலியுறுத்தி வருகிறோம். இந்த விவகாரத்தில் சட்டபூா்வமான நடவடிக்கைகளை திடமாக மேற்கொள்ள தமிழக அரசும், முதல்வரும் முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி கே.பழனிசாமி .