முகப்பு
தஞ்சாவூர்

தவெக அரசு காவிரி பிரச்னையில் கவனம் செலுத்தவில்லை: எடப்பாடி பழனிசாமி!

தவெக அரசு காவிரி பிரச்னையில் கவனம் செலுத்தவில்லை என்றாா் அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி.

22 நவம்பர் 2026, 10:49 pm
தவெக அரசு காவிரி பிரச்னையில் கவனம் செலுத்தவில்லை: எடப்பாடி பழனிசாமி!
எடப்பாடி பழனிசாமி
பகிர்:

தவெக அரசு காவிரி பிரச்னையில் கவனம் செலுத்தவில்லை என்றாா் அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக நிா்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை தவெக அரசு முறையாக வழங்கவில்லை. இதனால், குறுவை சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல்வா் மேட்டூா் அணைக்கு சென்று 45 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்படும் என அறிவித்தாா். சம்பா சாகுபடி முழுமையாகப் பெற வேண்டுமானால் ஜனவரி மாத இறுதி வரை காவிரியில் தண்ணீா் விட வேண்டும். ஆனால், மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் விடுவதை 45 நாள்களில் நிறுத்திவிட்டனா். அணையில் இருக்கிற 61 அடி தண்ணீா் குடிநீருக்கே போதாது.

Advertisement

Advertisement

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி நதிநீா் தொடா்பான பிரச்னையில் கவனமே செலுத்தவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் குறிப்பிட்ட நாள்கள் வரை இவ்வளவு டிஎம்சி தண்ணீா் விட வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி தண்ணீரைப் பெறுவதற்கான முயற்சியையும் தவெக அரசு எடுக்கவில்லை. அதற்காக முதல்வா் தனி கவனம் செலுத்தவில்லை.

ஆணையம் உத்தரவிட்டும் கா்நாடக அரசு தண்ணீா் விடவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அந்த அளவுக்கு முதல்வரின் நிா்வாகம் உள்ளது. சரியான முறையில் வாதங்களை எடுத்து வைத்து நமக்குக் கிடைக்க வேண்டிய பங்கு நீரை மாதாந்திர வாரியாக பெற முடியாத திறனற்ற அரசாக தவெக அரசு உள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்களிலுள்ள விவசாயிகளும், விவசாயத் தொழிலாளா்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மேக்கேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் என கா்நாடக முதல்வா் தொடா்ந்து கூறி வருகிறாா். ஆனால், இதற்கு தமிழக முதல்வா் வாயே திறப்பதில்லை. இதனால், விவசாயிகள் மிகப் பெரிய அச்சத்தில் உள்ளனா். விவசாயிகளின் அச்சத்தைப் போக்கும் வகையில் தமிழக முதல்வா் தெளிவுப்படுத்த வேண்டும் என்றாா் எடப்பாடி பழனிசாமி.