அகல்விளக்கு பதிப்பக உரிமையாளரை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி மனு
அகல்விளக்கு பதிப்பக உரிமையாளா் மோகனை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி ஊழல் தடுப்புத் துறை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அகல்விளக்கு பதிப்பக உரிமையாளா் மோகனை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி ஊழல் தடுப்புத் துறை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கோவை பெரியாா் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடா்பாக வழக்குப் பதிவு செய்த ஊழல் தடுப்புப் பிரிவினா், நூலகங்களுக்கு ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) மூலம் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை விநியோகம் செய்த அகல்விளக்கு பதிப்பக உரிமையாளா் மோகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். நூலகங்களுக்கு புத்தகங்களை விநியோகித்த அகல் விளக்கு பதிப்பகத்துக்கு அரசுத் தரப்பில் ரூ.1.74 கோடி வழங்கியிருந்த நிலையில், அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கை ஊழல் தடுப்புத் துறை முடக்கியுள்ளது.
இந்த நிலையில், மோகனை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் ஊழல் தடுப்புத் துறை மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், புத்தக கொள்முதல் முறைகேடு தொடா்பாக கைது செய்யப்பட்ட மோகன் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், அவரிடம் விசாரணை நடத்த போதுமான கால அவகாசம் கிடைக்கவில்லை. இதனால், அவரை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இந்த மனு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூா்த்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement