முகப்பு

இடம் மாற்றுவதாக ஆட்சியரிடம் பேரம் பேசியுள்ளார் தலைமைச் செயலர்! உதயநிதி குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம் தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் உதயநிதி புகார்...

50 வினாடிகள் முன்பு
இடம் மாற்றுவதாக ஆட்சியரிடம்  பேரம் பேசியுள்ளார் தலைமைச் செயலர்! உதயநிதி குற்றச்சாட்டு
உதயநிதி - X
பகிர்:

பெண் ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ தகாத குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று மனு அளித்துள்ளார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"புகார் மனு அளிக்க டிஜிபியைச் சந்திக்க வந்தோம். ஆனால் டிஜிபி சிங்கப்பெண் படைக்கு பயிற்சி அளிக்கச் சென்றுள்ளதாகக் கூறினார்கள். இந்த சிங்கப்பெண் படைக்கு என்ன பயிற்சி கொடுக்கிறார்கள்? இதுவரை அந்த படையை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? முதல்வர் ஒரு பெரிய சாதனையாக அறிவித்தார்.

Advertisement

Advertisement

இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எவ்வளவு சீரழிந்திருக்கிறது என்பது உங்கள் அனைவரும் தெரியும். பேரவையில் இதுகுறித்து கேட்டபோது அதற்கெல்லாம் முதல்வர் பதில் சொல்லாமல் சம்மந்தமில்லாமல் பேசினார்.

வன்முறை சம்பவத்தில் ஈடுபடுபவர்களில் 75% பேர் ஆளும் கட்சியின் நிர்வாகிகள்தான். மாவட்டச் செயலர், அமைச்சர், எம்எல்ஏக்கள் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள்.

ஒரு பெண் ஐஏஎஸ் அதிகரிக்கு ஆளும் கட்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் தொடர்ந்து தகாத செய்தி அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே, ஏன் இந்தியாவின் வரலாற்றிலேயே இப்படி ஒரு கேவலமான சம்பவம் நடந்தது கிடையாது. மது போதையில் ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்கு சென்று தகராறு செய்துள்ளார். மே மாதம் ஆட்சிக்கு வந்த நிலையில் ஜூலையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து தலைமைச் செயலாளரிடம் புகார் கொடுத்த நிலையில், வேறு மாவட்டத்திற்கு பணிமாறுதல் தருவதாக கூறியிருக்கிறார்கள். நேற்று நீதிமன்றத்திற்குச் சென்ற பிறகுதான் 116 நாள்களுக்குப் பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக இதுகுறித்து அனைவரும் பேசி வரும் நிலையில் இதுவரை எம்எல்ஏ மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இதில் இந்த சம்பவத்தை மறைத்த, அதேநேரத்தில் நடவடிக்கை எடுக்காத தலைமைச் செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளோம்.

முதல்வர் ஏன் இந்த விவகாரத்தில் இதுவரை வாய் திறக்காமல் இருக்கிறார்? தமிழ்நாட்டு மக்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் நடக்கவேயில்லை என்று அமைச்சர்கள் எல்லாம் முட்டுக்கொடுத்தார்கள். அவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?

பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் தன் வீட்டிற்கு மனு கொடுக்க வந்தவரை அடித்து துன்புறுத்திய விடியோவை பார்த்திருப்போம். இந்த சம்பவத்திலும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளோம்.

சட்டம் - ஒழுங்கு முதல்வரிடம் இருக்கிறது என்பதால் அவர் தூக்கத்தில் இருந்து எழுந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களுக்கு முதல்வர் மீது துளியும் நம்பிக்கையில்லை. தவெக எம்.எல்.ஏஅருள் விக்னேஷ் மீதான பாலியல் புகார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். அவரை உடனே கைது செய்ய வேண்டும். எம்எல்ஏ பாதுகாக்க தவெக அரசு முயற்சிக்கிறது" என்று கூறினார்.

summary

Udhayanidhi files a complaint at the DGP's office Kallakurichi TVK MLA issue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.