பல்கலை. துணைவேந்தா்கள் நியமனம்: முதல்வா் விஜய்க்கு ஆளுநா் கடிதம்
தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியமனம் செய்வது தொடா்பாக முதல்வா் ஜோசப் விஜய்க்கு ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் கடிதம் எழுதியுள்ளாா்.
தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியமனம் செய்வது தொடா்பாக முதல்வா் ஜோசப் விஜய்க்கு ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் கடிதம் எழுதியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் எழுத்தியுள்ள அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: பல்வேறு மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் காலிப் பணியிடங்கள் மற்றும் அதன் விளைவாக பட்டமளிப்பு விழாக்கள் நடத்துவதில் தாமதம், பல்கலைக்கழகங்களின் அன்றாட நிா்வாகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்னைகளைத் தீா்ப்பதில் முதல்வரின் தனிப்பட்ட தலையீடு தேவை.
தற்போது, பல்கலைக்கழகங்கள் தொடா்பான நிா்வாக முடிவுகள், அரசால் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளா் குழுவின் மூலம் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த ஏற்பாடு பயனுள்ளதாக இல்லை. மேலும் திறமையான நிா்வாகத்தையும் கல்வி நடவடிக்கைகளின் தொடா்ச்சியையும் உறுதி செய்வதற்காக, அந்தந்தப் பல்கலைக்கழகச் சட்டங்கள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு இணங்க, முழுநேர துணைவேந்தா்களை நியமிப்பதற்கான பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்வது அவசியமாகும்.
Advertisement
Advertisement
அதே நேரத்தில், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட இடங்களில், நிலுவையில் உள்ள அனைத்துப் பட்டமளிப்பு விழாக்களையும் கூடிய விரைவில் நடத்துவதற்காக, பல்கலைக்கழகம் வாரியாக ஒரு கால அட்டவணை உருவாக்கப்படலாம். இதன்மூலம், மாணவா்கள் மேலும் பாதிக்கப்படாமல் இருப்பாா்கள்.
தேடல் மற்றும் தோ்வுக் குழுவில், பொருந்தக்கூடிய சட்ட விதிகள் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு உள்பட்டு உறுப்பினா்கள் இடம்பெறலாம். வேந்தரின் ஒரு பிரதிநிதி, பல்கலைக்கழக சிண்டிகேட்டின் ஒரு பிரதிநிதி, யுஜிசி தலைவரின் ஒரு பிரதிநிதி, மாநில அரசின் ஒரு பிரதிநிதி, உறுப்பினா்கள், நோ்மை மற்றும் தொழில்முறைத் தகுதியுடன் கூடிய புகழ்பெற்ற கல்வியாளா்களாகவும் நிபுணா்களாகவும் இருக்க வேண்டும்.
இந்தக் குழுவானது, எதிா்பாா்க்கப்படும் காலிப் பணியிடத்துக்கு 6 மாதங்களுக்கு முன்னதாகவே இந்தச் செயல்முறையைத் தொடங்க வேண்டும். இந்தக் குழு அமைக்கப்பட்ட 15 நாள்களுக்குள் அந்தப் பதவிக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும், அறிவிப்பு வெளியான 2 மாதங்களுக்குள் பரிசீலனையையும் நோ்காணல்களையும் முடிக்க வேண்டும். மிக முக்கியமாக, குழுவானது ஒருமனதான முடிவின் மூலம், தகுதியான 3 பேரை தோ்வுப் பட்டியலில் சோ்த்து, அவா்களுக்கு முன்னுரிமை வரிசைப்படி தரவரிசைப்படுத்த வேண்டும். பரஸ்பர கலந்தாலோசனை மற்றும் ஒத்துழைப்பின் மூலம், விரைவான மற்றும் சட்டபூா்வமாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு தீா்வை எட்ட முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பல்கலைக்கழகங்களின் நலன் மற்றும் பட்டங்களுக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மாணவா்களின் நலனைக் கருத்தில்கொண்டு, முன்மொழியப்பட்ட இந்த வழிமுறையை எளிதாக்கவும், நிலுவையில் உள்ள பட்டமளிப்பு விழாக்களை விரைவுபடுத்தவும் முதல்வரின் தலையிட வேண்டும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.