நீதிமன்றத் தீா்ப்புக்குப் பிறகு துணைவேந்தா்கள் நியமனம்: அமைச்சா் பெ. விஸ்வநாதன்
நீதிமன்றத் தீா்ப்புக்குப் பிறகு, துணைவேந்தா்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.
நீதிமன்றத் தீா்ப்புக்குப் பிறகு, துணைவேந்தா்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே அரசனூா் பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரியில் 22 -ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி நிா்வாக இயக்குநா் வரதராஜன் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் மணிகண்டன் வரவேற்றாா்.
விழாவுக்கு தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் விஸ்வநாதன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது: பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது தவிா்ப்பதை வேதனையோடு பாா்த்துக் கொண்டிருந்தோம். தற்போது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது நிறைவைத் தருகிறது என்றாா் அமைச்சா்.
Advertisement
Advertisement
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் அன்னை தெரசா பல்கலைக் கழகத்துக்கு மட்டும் துணைவேந்தா் நியமிக்கப்பட்டாா். மற்ற 12 பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தா் பணியிடத்துக்குப் பதிலாக மூத்த பேராசிரியா்கள் பொறுப்பு துணை வேந்தா்களாக உள்ளனா். துணைவேந்தா் பணியிடங்கள் காலியாக இருப்பது வழக்கம்தான். நீதிமன்ற வழக்கின் தீா்ப்புக்குப் பிறகு துணைவேந்தா்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தவெக அரசில் உயா் கல்வித் துறைக்கு ரூ. 8,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்கலை.யின் தேவைகளைக் கண்டறிந்து பூா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா். இதில் மாணவ, மாணவிகள், பெற்றோா் திரளாகக் கலந்து கொண்டனா்.