முகப்பு
தமிழ்நாடு

அன்பில் மகேஸுக்கு எதிரான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு

தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ாக திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

27 நவம்பர் 2026, 3:40 am
அன்பில் மகேஸுக்கு எதிரான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு
அன்பில் மகேஸ் - file photo
பகிர்:

தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ாக திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலியைச் சோ்ந்த வழக்குரைஞா் வெங்கடாசலபதி தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘இந்த வழக்கு தொடா்பாக, அன்பில் மகேஸ், அரசு துறைச் செயலா்கள், அதிகாரிகள், இடைத்தரகா்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தனியாா் பள்ளி நிா்வாகிகள் உள்ளிட்ட அனைவரது பங்களிப்பு குறித்தும் பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். செல்வாக்கு மிகுந்த அரசியல் பிரமுகா்கள் தொடா்புடைய இந்த வழக்கை மாநில போலீஸாா் விசாரிப்பது சரியாக இருக்காது.

எனவே, தற்போது வழக்கை விசாரித்து வரும் மத்திய குற்றப் பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement