எம்எல்ஏ அருள் விக்னேஷ், பேரவைத் துணைத் தலைவர் மீது ஆளுநரிடம் உதயநிதி புகார்!
எம்எல்ஏ அருள் விக்னேஷ், பேரவைத் துணைத் தலைவர் மீது ஆளுநரிடம் உதயநிதி புகார் அளித்தது பற்றி...

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ், சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார் அளித்துள்ளார்.
பெண் ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில் எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மனு அளித்தார்.
இந்த நிலையில், இன்று காலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் புகார் அளித்துள்ளார்.
Advertisement
Advertisement
அவருடன் திமுக எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் ஆளுநரைச் சந்தித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ், சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக டிஜிபியை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்குமாறும் திமுக தரப்பில் ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.