முகப்பு

வங்கி, செல்போன் கடை இரவு காவலாளிகளை கல்லால் தாக்கி கொள்ளை முயற்சி

ஆத்தூரில் கூட்டுறவு வங்கி, செல்போன் கடை இரவு காவலர்களைத் தாக்கிவிட்டு மர்ம நபர் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளது குறித்து...

44 வினாடிகள் முன்பு
வங்கி, செல்போன் கடை இரவு காவலாளிகளை கல்லால் தாக்கி கொள்ளை முயற்சி
ஆத்தூரில் கூட்டுறவு வங்கி, செல்போன் கடை இரவு காவலர்களைத் தாக்கிவிட்டு மர்ம நபர் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். - டிஎன்எஸ்
பகிர்:

ஆத்தூரில் கூட்டுறவு வங்கி, செல்போன் கடை இரவு காவலர்களைத் தாக்கிவிட்டு மர்ம நபர் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரின் மையப் பகுதியான பேருந்து நிலையம் அருகே ஆத்தூர் நகர தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரயில் நிலையம் அருகே இயங்கி வருகிறது. இந்த கூட்டுறவு வங்கியின் இரவு காவலாளியாக கல்லாநத்தம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி(59) பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் வங்கிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவர் கண் அயர்ந்த நேரத்தில் தலையில் மிகப்பெரிய பாறாங்கல்லை தூக்கி தலையில் போட்டுவிட்டு உனது செல்போன் எங்கே என கேட்டுள்ளார்.

Advertisement

Advertisement

காவலாளி சத்தம் போட்டவுடன் மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர், அதன் அருகில் சற்று தூரத்தில் பேருந்து நிலையம் பகுதியில் தனியார்க்கு சொந்தமான செல்போன் கடை முன் படுத்திருந்த இரவு காவலாளி ராஜா(65) என்பவரை பாறாங்கல்லால் தாக்கியுள்ளார்.

இதில், அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக கடை வாசலிலேயே கிடந்துள்ளார்.

இந்த செல்போன் நிறுவனங்களின் கண்காணிப்பு கேமரா மூலம் சென்னையில் இருப்பவர் இதனை கண்காணித்து செல்போன் கடை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த காவலாளியை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு கூட்டுறவு வங்கி காவலாளி முத்துசாமி, செல்போன் கடை காவலாளி ராஜா ஆகிய இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நகரின் முக்கிய பகுதியில் இரண்டு இடங்களில் இரவு காவலாளிகள் தாக்கப்பட்டு சம்பவம் ஆத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஆத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டுறவு வங்கி மற்றும் செல்போன் கடையில் கொள்ளை அடிக்க திட்டமிட்டு இந்த செயல் நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Attempted robbery: Night watchmen at a bank and a mobile phone shop attacked with stones

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.