பறவைகள் உயிரிழப்பு: நவ. 30 வரை சென்னை கிண்டி பூங்கா மூடல்!
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் பறவைகள் உயிரிழந்ததையடுத்து பூங்கா மூடப்படுவதாக அறிவிப்பு...
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் பறவைகள் உயிரிழந்ததையடுத்து நவ. 30 வரை அல்லது மறுஉத்தரவு வரும் வரை பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் நீர்வாழ் பறவைகள் சில உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் இறந்த பறவைகளின் மாதிரிகள், பரிசோதனைக்காக போபால் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
மேலும், பறவைகள் இருப்பிடம் தனிமைப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மற்ற பறவைகள், விலங்கினங்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 3 நாள்களுக்கு அதாவது நவ. 30 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை பூங்கா மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.