சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 23) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 23) விசாரணைக்கு வரவுள்ள வழக்குகள் குறித்து...

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி அதிமுக பெண் வழக்குரைஞர் திரிசூலி தொடர்ந்த வழக்கு, தூத்துக்குடியில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2,200-க்கு மேற்பட்டோருக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 23) விசாரணைக்கு வரவுள்ளது.
இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்
* மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி அதிமுகவைச் சேர்ந்த பெண் வழக்குரைஞர் திரிசூலி தொடர்ந்த வழக்கு
Advertisement
Advertisement
* கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க ஊழல் தடுப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக சட்டப்பிரிவு இணைச் செயலர் பரந்தாமன் தொடர்ந்த வழக்கு
* ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் பிரகாஷின் முன்பிணை மனுவை தள்ளுபடி செய்த போக்ஸோ சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு
* திமுக தலைவர்கள் குறித்து ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ள தவறான பதிவுகளை நீக்கக் கோரி, திமுக வழக்குரைஞர் நடராஜன் தொடர்ந்த வழக்கு
* போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2,200-க்கு மேற்பட்டோருக்கு எதிரான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்படவிருக்கிறது.