முகப்பு

பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! நிவாரணம் வழங்கப்படுமா?

மழை இல்லாததால் பயிர்கள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து முதல்வர் விஜய் ஆலோசனை...

14 வினாடிகள் முன்பு
பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! நிவாரணம் வழங்கப்படுமா?
முதல்வர் விஜய் - கோப்புப்படம்
பகிர்:

டெல்டா விவசாயிகள் பிரச்னை தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் மழை இல்லாததால் பயிர்கள் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மழைநீர் பொய்த்துப் போனதால் பயிர்கள் அதிகமாக சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வறட்சிப் பகுதிகளாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதையடுத்து பயிர் சாகுபடி நிலவரம் மற்றும் பயிர்க் காப்பீடு, கால்நடைத் தீவனம் உள்ளிட்டவை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

Advertisement

இந்த கூட்டத்தில் நீர்வளம், நிதி, கூட்டுறவு, பொதுப்பணித் துறை, கால்நடைத் துறை, வேளாண் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

டெல்டா விவசாயிகளுக்கு வறட்சி நிதி வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.

summary

Impact on crop cultivation: Chief Minister Vijay meeting with officials, ministers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.