முகப்பு

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது?

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டது குறித்து...

17 வினாடிகள் முன்பு
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது?
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் - கோப்புப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ சி. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக உள்ள ஜெ.இ. பத்மஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸிடம் நவ. 23-ஆம் தேதி நேரடியாக புகாா் தெரிவித்தாா்.

இந்த புகாரைத் தொடா்ந்து எம்எல்ஏ சி. அருள் விக்னேஷ் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் நவ. 24-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், சம்பவம் குறித்து வியாழக்கிழமையில் (நவ. 26) நீதிபதியிடம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக வாக்குமூலம் அளித்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

Kallakurichi TVK MLA Arul Vignesh arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.