முகப்பு

திருப்பரங்குன்றம் தூணில் நாளை தீபம்! உத்தரவை செயல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு!

தூணில் நாளை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்தது உச்ச நீதிமன்றம்.

35 வினாடிகள் முன்பு
திருப்பரங்குன்றம் தூணில் நாளை தீபம்! உத்தரவை செயல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு!
ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு
பகிர்:

திருப்பரங்குன்றம் கோயிலில் தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், உத்தரவை செயல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்துள்ளது.

நாளை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண் பகுதியில் தீபம் ஏற்றுவதை முன்னிட்டு, கோயில் நிர்வாகிகளாக மேகாலயா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். வைத்தியநாதன் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை மீது தூண் பகுதியில் தீபம் ஏற்றப்படாத விவகாரத்தில், தமிழக தலைமைச் செயலர் மற்றும் டிஜிபி ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம், இதையடுத்து, இருவர் தரப்பிலும் காணொலி வாயிலாக ஆஜராகக் கோரிய அனுமதியை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

Advertisement

Advertisement

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கோயில் மற்றும் தர்கா பகுதிகளை வேறுபடுத்தும் விதமாக வேலி அமைக்கலாம். எந்த வகையிலும் திருப்பரங்குன்றம் தர்காவின் செயல்பாடுகளில் தடைகள் இருக்கக் கூடாது. திருப்பரங்குன்றம் கோயிலில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்றப்பட வேண்டும். மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோயிலின் நிர்வாகப் பொறுப்பை ஏற்பதற்காக, மேகாலயா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். வைத்தியநாதன் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி வி. பார்த்திபன் ஆகியோர் அடங்கிய குழுவை நிர்வாகிகளாக (RECEIVERS) நியமித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் தூண் பகுதியில் தீபம் ஏற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அறங்காவலர் குழு, தலைமைச் செயலர் உள்ளிட்டோர் பிரமாணப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 10 நாள்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

summary

A lamp to be lit on a pillar at Tirupparankundram tomorrow! A committee led by retired judges has been formed to implement the order!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.