‘அன்பும் - முத்தங்களும்’.. பிறந்த நாளையொட்டி பெற்றோரிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி!
பிறந்த நாளை ஒட்டி தந்தையும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றதைப் பற்றி...

பிறந்த நாளை ஒட்டி தந்தையும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார்.
திமுக இளைஞரணிச் செயலரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ. 27) 50-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், கட்சி தொண்டர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமான நபர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்த நாளையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து திமுக சார்பில், உதயநிதியின் பிறந்தநாளையொட்டி பல்வேறு நலத்திட்ட பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தன்னுடைய பிறந்த நாளையொட்டி தந்தையும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தாய் துர்காவை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “பிறந்த நாளை முன்னிட்டு எந்நாளும் அன்போடு வழிநடத்தும் கழகத்தலைவர் - பாசமிகு அப்பாவிடமும் - அரவணைத்து ஊக்குவிக்கும் அம்மாவிடமும் இன்று காலை வாழ்த்துப் பெற்றேன். அம்மா - அப்பாவுக்கு அன்பும் - முத்தங்களும்!” எனப் பதிவிட்டுள்ளார்.
On the occasion of his birthday, Udhayanidhi Stalin, the Leader of the Opposition, sought the blessings of his father, DMK leader M.K. Stalin.