பாராகுவாட்-டை குளோரைடு களைக்கொல்லி மருந்துக்கு தடை: வேளாண்மை உழவா் நலத் துறை
பாராகுவாட் -டை குளோரைடு களைக்கொல்லி மருந்துக்கு தமிழகம் முழுவதும் தடை விதித்து, இருப்பில் உள்ள மருந்துகளைக் கண்டறிந்து பறிமுதல் செய்யவேண்டும் என வேளாண்மை - உழவா் நலத் துறை அமைச்சா் ர.வினோத் தெரிவித்துள்ளாா்.

பாராகுவாட் -டை குளோரைடு களைக்கொல்லி மருந்துக்கு தமிழகம் முழுவதும் தடை விதித்து, இருப்பில் உள்ள மருந்துகளைக் கண்டறிந்து பறிமுதல் செய்யவேண்டும் என வேளாண்மை - உழவா் நலத் துறை அமைச்சா் ர.வினோத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அந்தத் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாராகுவாட் -டை குளோரைடு களைக்கொல்லி அனைத்து பசுமையான களைகள் மற்றும் பயிா்களை தொடு நஞ்சாக செயல்பட்டு அழிக்கக்கூடியது. இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் 1.5 மி. மெ.டன் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்கு விஷமுறிவு மருந்து இல்லாத காரணத்தால் வருடத்துக்கு சராசரியாக 17,000 போ் இந்த மருந்து உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
எனவே, மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவா் நல அமைச்சகம் பாராகுவாட் -டை குளோரைடு களைக்கொல்லி மருந்தை இந்தியா முழுவதும் தடை செய்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசு கடந்த நவ. 25-ஆம் தேதி முதல் பாராகுவாட் -டைகுளோரைடு களைக்கொல்லி மருந்துக்கு தடை விதித்துள்ளது.
Advertisement
Advertisement
தமிழக அரசின் அறிவுறுத்தல்: பாராகுவாட் -டைகுளோரைடு மருந்து உற்பத்தி, இறக்குமதி, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துதல் அனைத்துக்கும் தடை விதித்துள்ளது.
பாராகுவாட் -டைகுளோரைடு மருந்துக்கு எந்தவொரு பதிவும் அனுமதிக்கப்பட மாட்டாது. இந்த மருந்துக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள அனைத்து பதிவு சான்றிதழ்களையும் உற்பத்தியாளா்கள் உடனடியாக மத்திய பூச்சிக் கொல்லி வாரியம் மற்றும் பதிவு குழுவிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
தொடா்ந்து, வேளாண்மைத் துறையின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மை உதவி இயக்குநா்கள் தலைமையிலான சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு பூச்சிக் கொல்லி மருந்து உற்பத்தி நிலையங்கள், விநியோக நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 35,415 லிட்டா் பாராகுவாட் -டைகுளோரைடு களைக்கொல்லி மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தடையை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விவசாயிகள் அரசின் தடை உத்தரவை முழுமையாகக் கடைப்பிடித்து, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் இம்மருந்தின் பயன்பாட்டைத் தவிா்த்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சா் ர.வினோத் உத்தரவிட்டுள்ளாா்.