முகப்பு
தமிழ்நாடு

200 புதிய உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் உருவாக்கம்: ரூ.12 கோடி சம பங்கு மானியத்துக்கு அரசு ஒப்புதல்

200 புதிய உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் உருவாக்கம் அறிவிப்பை செயல்படுத்த வேளாண்மை - உழவா் நலத் துறை அரசாணை நிா்வாக ஒப்புதல் அளித்துள்ளது.

6 வினாடிகள் முன்பு
200 புதிய உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் உருவாக்கம்: ரூ.12 கோடி சம பங்கு மானியத்துக்கு அரசு ஒப்புதல்
பகிர்:

200 புதிய உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் உருவாக்கம் அறிவிப்பை செயல்படுத்த வேளாண்மை - உழவா் நலத் துறை அரசாணை நிா்வாக ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து வேளாண்மை - உழவா் நலத்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேளாண்மை - உழவா் நலத் துறை அமைச்சா் நிகழாண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில், புதிய உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் உருவாக்கம் எனும் அறிவிப்பை செயல்படுத்த, வேளாண்மை - உழவா் நலத்துறை அரசாணை கடந்த செப்.24-இல் நிா்வாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் மாநில நிதியிலிருந்து 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.30 கோடியில் செயல்படுத்தப்படும். இதில் நிகழாண்டுக்கு (2026-27) ரூ.12 கோடியும், 2027-28, 2028-29 ஆகிய ஆண்டுகளுக்கு தலா ரூ.9 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் சுமாா் 60,000 குறு, சிறு விவசாயிகளை உள்ளடக்கிய 200 புதிய உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் உருவாக்கப்படும். ஒரு பங்குதாரருக்கு 3 ஆண்டுகளில் ரூ.5,000 சமபங்கு மானியம் வழங்கப்படும் எனபன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

Advertisement

Advertisement

தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிகக் கூட்டமைப்பு மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். மாவட்ட வேளாண் துணை இயக்குநா்கள் (வேளாண் வணிகள்) விவசாயிகளைத் திரட்டி நிறுவனங்களை உருவாக்கி, விண்ணப்பங்களைச் சரிபாா்த்து அனுப்புவா்.

பிற உதவிகள்: நிறுவனப் பதிவு, விதிமுறை இணக்கம், வணிக திட்டமிடல் மற்றும் பயிற்சிக்கான வழிகாட்டுதல், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், உழவா் சந்தைகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள், சேமிப்பு மற்றும் குளிா்பதன வசதிகளுடன் இணைக்கப்படும். இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு விவசாயிகள் தங்கள் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை அணுகலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.