முகப்பு

செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்தியதாக சிபிசிஐடி மீது இளைஞர்கள் புகார்

செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொள்ள இளைஞர்களை சிபிசிஐடி போலீஸார் வற்புறுத்தியது குறித்து...

23 வினாடிகள் முன்பு
செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்தியதாக சிபிசிஐடி மீது இளைஞர்கள் புகார்
விழுப்புரம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்க வந்த இளைஞர்கள் - DNS
பகிர்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தியதாக சிபிசிஐடி மீது 3 இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் மகள் ஹேமலதா (7), கடந்த அக். 12 ஆம் தேதி அதிகாலை வீட்டில் இருந்து மாயமானார்.

சிறுமி மாயமாகி 48 நாள்களான நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்பட சுமார் 60-க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு தங்களை வற்புறுத்தி, சித்ரவதை செய்வதாக சிபிசிஐடி போலீஸார் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. மதிவாணனிடம் 3 இளைஞர்கள் வெள்ளிக்கிழமை (நவ. 27) புகார் அளித்துள்ளனர்.

புகாரின்படி, ஆலம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா்களான கைப்பேசி விற்பனையகம் நடத்தி வரும் கா. ராஜ்குமாா் (26),சென்னையில் சரக்கு வாகனம் ஓட்டி வரும் சு. கமல்ராஜ் (25), பெங்களூரில் கூலி வேலை செய்து வரும் பா. ரேணு (30) ஆகிய மூவரையும் வழக்கு தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கடந்த ஒரு வார காலமாக அடித்து துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், உண்மைக்கு மாறாக குற்றத்தை ஒப்புக்கொள்ளக் கட்டாயப்படுத்துவதாகவும், ரூ. 2 லட்சம் தருவதாகக் கூறுவதாகவும் சிபிசிஐடி போலீஸார் மீது 3 இளைஞர்களும் புகார் அளித்துள்ளனர்.

சிபிசிஐடி போலீஸார் மீது நடவடிக்கை எடுக்குமாறு இளைஞர்கள் கோரிய நிலையில், இனி இதுபோல் நடக்காது என இளைஞர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

summary

Case of the missing girl in Gingee: Youths allege that the CBCID coerced them into confessing to the crime

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.