முகப்பு

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் பாதுகாப்புக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிப்பு!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் பாதுகாப்பு பணிக்காக 400-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளது பற்றி..

30 வினாடிகள் முன்பு
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் பாதுகாப்புக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிப்பு!
சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிப்பு - file photo
பகிர்:

மதுரை, திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பாதுகாப்புப் பணிக்காக மத்திய ரிசர்வ் காவல் படையினர் (சிஆர்பிஎஃப்) வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று ஐஜி விக்ரம் தெரிவித்தார்.

​மலையில் தீபம் ஏற்றும் நிகழ்வையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சிஆர்பிஎஃப் (சிஆர்பிஎஃப்) ஐஜி விக்ரம் வருகை தந்தார். ​அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

​"நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பாதுகாப்புப் பணிகளுக்காக இங்கு வந்துள்ளோம். தற்போதைய நிலையில் 4 கம்பெனி படைப்பிரிவுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ளனர்.

Advertisement

Advertisement

​தொடர்ந்து மலைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய உள்ளேன். கள நிலவரத்தை ஆய்வு செய்த பிறகு, தேவைப்பட்டால் கூடுதல் மத்தியப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் இறக்கப்படுவார்கள்" என்றார் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.