முகப்பு

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை... பாஜகவினருக்கு கோரிக்கை வைத்த நயினார் நாகேந்திரன்!

தூணில் தூபம் ஏற்றும் வரை ஒவ்வொருவரும் வெள்ளியும் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் தீபம் ஏற்ற வலியுறுத்தியுள்ளது தொடர்பாக...

25 நவம்பர் 2026, 9:20 pm
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை... பாஜகவினருக்கு கோரிக்கை வைத்த நயினார் நாகேந்திரன்!
நயினார் நாகேந்திரன் - DNS
பகிர்:

திருப்பரங்குன்றத்தில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றும் வரை பாரதிய ஜனதா கட்சியினர் ஒவ்வொருவரும் வெள்ளிக்கிழமை தோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் தீபம் ஏற்றி, பிரகாரத்தைச் சுற்றி வர வேண்டும் என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜன நாயகத்தைக் காப்போம் - ஆதிக்க கும்பலை ஒழிப்போம் என வலியுறுத்தி தஞ்சாவூர் பேரணி நடைபெற்றது. நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் கொட்டும் மழையில் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பனகல் கட்டிடத்தில் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

பின்னர் செய்தியாளர்களுடன் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:

''காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி நவம்பர் 4 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 67 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவில்லை. இதனால், டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சிவக்குமாரிடம் தமிழக முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், வறட்சி நிவாரணத்தை அறிவிக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியர் தொடர்பான பாலியல் புகார் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கும் பொறுப்பு இருப்பதாகக் கூறி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளது. நடிகர் என்ற முறையில் விஜய் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும், ஆனால் தற்போதைய அரசின் நிர்வாகம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுகிறது.

சமூக வலைதளங்களில் முதல்வர் விஜய் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்து தனிப்பட்ட முறையில் அவதூறு பரப்பும் வகையிலான விடியோக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும், சமூக வலைதளங்களுக்கு உரிய கட்டுப்பாடுகள் தேவை'' எனக் குறிப்பிட்டார்.

''திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றப்படாதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய அவர், மாவட்ட ஆட்சியரும் கோயில் நிர்வாகமும் இணைந்து நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தியிருக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றும் வரை பாரதிய ஜனதா கட்சியினர் ஒவ்வொருவரும் வெள்ளிக்கிழமையும் தோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் தீபம் ஏற்றி, பிரகாரத்தைச் சுற்றி வர வேண்டும்'' என தெரிவித்தார்.

summary

Until a lamp is lit on the pillar at Tirupparankundram... Nainar Nagendran makes a request to BJP members!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.