முகப்பு

குமரகோட்டம் முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்! மலர்களால் அலங்காரம்!

குமரகோட்டம் முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் நிலையில், வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் நடைபெற்று வருகிறது.

குமரகோட்டம் முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்! மலர்களால் அலங்காரம்!
குமரகோட்டம் முருகன் கோவில்
பகிர்:

குமரகோட்டம் முருகன் கோவிலில் நாளை (நவ.29) கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் நிலையில், வண்ண வண்ண பூக்களால் அலங்காரம் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள, கந்தபுராணம் அரங்கேற்றிய தலமாக கருதப்படும் புகழ்பெற்ற குமரகோட்டம் முருகன் திருக்கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக் கிழமை காலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது.

இதனை ஒட்டி கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

நாளை காலை கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. அலங்கார பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மேலும், கோவில் வளாகத்தில் வரும் பக்தர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் பக்தர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.