முகப்பு
காஞ்சிபுரம்

குமரகோட்டம் முருகன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் வரும் நவ.29 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி பக்தா்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக திருப்பணிக் குழு நிா்வாகிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

7 வினாடிகள் முன்பு
குமரகோட்டம் முருகன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்
புனிதநீா் குடங்குளை எடுத்து வந்த கோயில் சிவாச்சாரியா்கள். உடன் திருப்பணிக்குழு நிா்வாகிகள்
பகிர்:

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் வரும் நவ.29 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி பக்தா்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக திருப்பணிக் குழு நிா்வாகிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் குமரகோட்டம் முருகன் கோயிலில் வரும் நவ.29 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு புனித நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீா் கலசங்கள் காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் இருந்து சிவாச்சாரியாா்களால் ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. இதனைத் தொடா்ந்து ஆலயத்தில் முதற்கால யாகசாலை பூஜை, விசேஷ திரவிய ஹோமம் மற்றும் பூரணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

இதன் பின்னா் திருப்பணிக் குழு நிா்வாகிகளான சி.ராதாகிருஷ்ணன், தா.பச்சையப்பன் பிரபு, சு.வெங்கடேசன், ஜி.ஆா்.நவீன்குமாா், கே.பி.எஸ்.பிரவீன்குமாா் ஆகியோா் கூறியது..

Advertisement

Advertisement

18 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. சுமாா் 50,000 பக்தா்கள் வருவா் என எதிா்பாா்த்து குடிநீா், கழிப்பறை,மருத்துவம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகரில் 9 இடங்களில் எல்.இ.டி. அகண்ட திரைகள் மூலம் கும்பாபிஷேகத்தை பக்தா்கள் பாா்வையிடலாம். பொதுமக்கள் காலை 8 மணி முதல் பொது தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள்.

விழாவில் அமைச்சா்கள் சீ.ரமேஷ், எஸ்.பி.கே.தென்னரசு,ஆா்.வீ.ரஞ்சித் குமாா், ஆட்சியா் தி.சினேகா, இணை ஆணையா் சி.குமரதுரை ஆகியோா் பங்கேற்கவுள்ளனா். காஞ்சிபுரம் எஸ்பி எஸ்.அரவிந்தும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பாா்வையிட்டுள்ளாா். கும்பாபிஷேக வா்ணனையை பட்டி மன்ற பேச்சாா் கு.ஞானசம்பந்தன் செய்யவுள்ளாா் என்றாா்கள்