குமரகோட்டத்தில் நவ. 29-ல் மகா கும்பாபிஷேகம்! வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் திருத்தலம்!
18 ஆண்டுகளுக்குப் பிறகு குமரகோட்டத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவது பற்றி..

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி கோயில் முழுவதும் மின் விளக்குகளால் ஜொலித்து வருகின்றது.
புகழ்பெற்ற கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) அன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
இதனையொட்டி கோயில் கோபுரம், ஆலய வளாகம் மற்றும் கோயில் அமைந்துள்ள மேற்கு ராஜவீதி பகுதி முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இரவு நேரத்தில் வண்ண ஒளிகளில் ஜொலிக்கும் குமரகோட்டம் திருக்கோயில் கோபுரமும், வெளிச்ச வெள்ளத்தில் மிளிரும் மேற்கு ராஜவீதியும் வானில் இருந்து ட்ரோன் கேமரா மூலம் கழுகுப் பார்வையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களை வெகுவாகக் கவரும் இந்த ரம்மியமான வான்வழி டிரோன் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.