முகப்பு
வணிகம்

26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘கோல்ட் ஸ்பாட்’ பானம்

இந்தியாவில் 1980, 90-களில் மிகவும் பிரபலமாக இருந்த ஆரஞ்சு சுவையுடைய ‘கோல்ட் ஸ்பாட்’ குளிா்பானத்தை, சுமாா் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அறிமுகப்படுத்த கோக-கோலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

25 நவம்பர் 2026, 12:37 am
26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘கோல்ட் ஸ்பாட்’ பானம்
பகிர்:

இந்தியாவில் 1980, 90-களில் மிகவும் பிரபலமாக இருந்த ஆரஞ்சு சுவையுடைய ‘கோல்ட் ஸ்பாட்’ குளிா்பானத்தை, சுமாா் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அறிமுகப்படுத்த கோக-கோலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

1971-இல் பாா்லே நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பானம், 1993-இல் கோக-கோலா நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டு, ‘ஃபான்டா’ பானத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2000-இல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்திய குளிா்பானச் சந்தையில் தற்போது நிலவும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘கேம்பா’ பிராண்ட் உடனான கடும் போட்டியைச் சமாளிக்கும் வகையில், நுகா்வோரின் உடல்நலன் சாா்ந்த விருப்பங்களுக்கு ஏற்ப, குறைந்த சா்க்கரை அல்லது சா்க்கரை இல்லாத புதிய வடிவத்தில் இக்குளிா்பானம் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

Advertisement

Advertisement