FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருப்பரங்குன்றம் தூணில் தீபம்! வழிகாட்டுதல் குழுவில் ஆட்சியர்!

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் குழுவில் மாவட்ட ஆட்சியர் இணைக்கப்பட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் தூணில் தீபம்! வழிகாட்டுதல் குழுவில் ஆட்சியர்!
திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில்
பகிர்:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றும் பணிகளுக்காக வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் மதுரை மாவட்ட ஆட்சியரும் இடம்பெற்றுள்ளார்.

​திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் உள்ள தூணில் இன்று மாலை கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில், திருக்கோயில் நிர்வாகப் பணிகளை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

Advertisement

Advertisement

தற்போது, தூணில் தீபம் ஏற்ற வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு, அதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவர், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், சிஆர்பிஎஃப் ஐ.ஜி., ஸ்தானீக பட்டார்கள் 2 பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என கோயில் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ள நீதிபதிகள் அறிவித்துள்ளனர். தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

summary

lamp on a pillar Tirupparankundram Collector included in the steering committee!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.