FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றம்!

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில், ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் அடங்கிய வழிகாட்டுதல் குழுவினர் முன்னிலையில் தீபம் ஏற்றப்பட்டது.

24 வினாடிகள் முன்பு
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றம்!
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றம்
பகிர்:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தீபம் ஏற்றப்பட்டது.

உச்ச நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் அடங்கிய வழிகாட்டுதல் குழுவினர் முன்னிலையில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

​திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நீதிபதிகள் உள்ளிட்ட வழிகாட்டுதல் குழுவினர் மாலை 4.30 மணிக்கு மலையில் உள்ள தூண் பகுதிக்கு வருகை தந்தனர்.

Advertisement

Advertisement

ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், அவர்களது முன்னிலையில், பக்தர்களின் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் தீபம் ஏற்றப்பட்டது.

முன்னதாக தூணைச் சுற்றிலும் மரங்களால் சாரம் கட்டப்பட்டு, அதன் மேல் நின்று விளக்கேற்றுவதற்கு ஏதுவாகப் பலகைகள் அடிக்கப்பட்டு தீப மேடை தயார் நிலையில் வைக்கப்பட்டது.

மேலும், தீபம் ஏற்றுவதற்கு 30 கிலோ நெய், திரி தயாரிப்பதற்கான 50 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் மற்றும் மண்பானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையிலிருந்து வந்த 6 பேர் கொண்ட பாரம்பரிய தீப மிராசுதாரர்கள் குழுவினர், மண்கலயங்களை வைத்து காடா துணிகளைக் கொண்டு திரிகளைத் தயாரித்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தீபம் ஏற்றும்போது தொல்லியல் துறை அதிகாரி அறவாழி தலைமையிலான குழுவினரும், கோயிலின் நான்கு ஸ்தானிக பட்டர்களும் மலை உச்சியில் இருந்தனர்.

ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகிய இருவரும் மலையேறி வந்து தீபம் ஏற்றும் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

திருப்பரங்குன்றம் தீபம்!

மலை மீதிருந்து வெளியான காட்சிகளில், மலையில் உள்ள தூணில் ஒரு பெரிய விளக்கு வைக்கப்பட்டு அதில் எண்ணெயில் நனைந்த திரி வைக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கில் நெய் ஊற்றப்பட்டு பிறகு அதற்குள் அடுக்கடுக்காக மூன்று மண்கலயங்கள் வைத்து முழுக்க நெய் ஊற்றி பெரிய அகல் விளக்கிலிருந்து திரி பகுதி மண் கலயங்களை மறைத்தவாறு மேலே ஒன்றிணைத்து கோபுரம் கோல கட்டப்பட்டுள்ளது. கட்டப்பட்ட துணிகளுக்குள் சூடங்கள் இணைக்கப்பட்டு சரியாக 5 மணிக்கு இங்கு தீபம் ஏற்றப்பட்டது.

summary

A lamp was lit on a pillar atop the Tirupparankundram hill!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.