முகப்பு

தமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!

சென்னை வருகையை உறுதி செய்த ராகுல் காந்தி.

தமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!
மு.க. ஸ்டாலின் / ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:

தமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் மு.க. ஸ்டாலின் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தான் சந்திக்கவுள்ளதாக ராகுல் காந்தி, தன்னுடைய பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு, ஆதரவளிக்கவுள்ளதாக திமுக நேற்று அறிவித்திருந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் இன்று (நவ. 29) சந்தித்துப் பேசவுள்ளனர்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக, ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் நானும் சென்னைக்குச் சென்று, மு.க. ஸ்டாலினைச் சந்தித்து, தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்களை எதிர்க்குமாறு அவரிடமும் திமுகவிடமும் கோரிக்கை விடுக்க இருக்கிறோம்.

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது இந்திய ஜனநாயகத்தையே முடிவுக்குக் கொண்டு வந்துவிடும். இந்தியாவின் ஒட்டுமொத்த தேர்தல் வரைபடத்தையும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்க, இது வரம்பற்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

சகோதரர் ஸ்டாலின், தமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக எப்போதும், ஒரு பாறையைப் போல உறுதியாக நின்றிருக்கிறார்.

நாட்டின் நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும், இந்த மசோதாவை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Rahul Gandhi, Leader of the Opposition in the Lok Sabha, has stated that brother M.K. Stalin stands against anti-Tamil forces.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.