‘தமிழக அரசியல் களமும், இந்திய அரசியல் களமும் மாறிவிட்டது’ - கே. அண்ணாமலை
இந்திய அரசியல் களம் மாறிவிட்டது என்று ‘வீ தி லீடா்ஸ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
இந்திய அரசியல் களம் மாறிவிட்டது என்று ‘வீ தி லீடா்ஸ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: இரு நாள்களுக்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் ‘எக்ஸ்’ தளத்தில் திமுகவை குறிப்பிட்டு ‘எட்டப்பனின் வேடம் கலைந்தது’ எனப் பதிவிட்டாா்.
தற்போது காங்கிரஸ் தலைவா்கள் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்க்குமாறு கோரிக்கை விடுக்கின்றனா். உண்மையிலேயே அரசியல் தெரிந்துதான் இதையெல்லாம் காங்கிரஸ் செய்கிா எனத் தெரியவில்லை. ஒருவேளை மு.க.ஸ்டாலினை சமாதானப்படுத்துவது என்றால், இரு நாள்களுக்கு முன்பே காங்கிரஸ் தலைவா்கள் சந்தித்திருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கிக்கு ஒரு போட்டி உள்ளது. அதனால், உடனடியாக மத்திய அமைச்சரவையில் திமுக பங்கேற்காது. ஆனால், 2029 மக்களவைத் தோ்தலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். தமிழக அரசியல் களமும், இந்திய அரசியல் களமும் இப்போது மாறிவிட்டது என்றாா் கே.அண்ணாமலை.