முகப்பு

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது: அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

தமிழகத்தில் தவெக ஆட்சியில் மக்கள் சொல்லொணா துயரத்தில் உள்ளனர் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்திருப்பது குறித்து...

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது: அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ. - DNS
பகிர்:

மதுரை: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

முதல்வர் விஜய் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள குதிரைபேரம் நடத்தி சினிமா வசனம் பேசுவது போல் பேசிவிட்டு தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

Advertisement

Advertisement

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு ஏற்படும் எந்த பிரச்னையாக இருந்தாலும் சிறை மரணம், சிறுமிகளுக்கான பாலியல் சீண்டல்கள் என எதுவாக இருந்தாலும் குரல் கொடுத்துவருகிறார்.

பெண்களுக்கு எதிரான துன்பங்கள் துயரங்கள் அதிகரித்துள்ளது. தவெகவில் உள்ள மகளிர்க்கே விஜய் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. இதுபோன்ற பிரச்னைகளை எதிர்த்து கண்டித்து வருபவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே.

ஒரு எதிர்க்கட்சியாக கள்ளக்குறிச்சிக்கு சென்று மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த இன்னலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில், தங்கள் கட்சி நிா்வாகிகளை காப்பாற்றுவதற்கு தவெக தலைவா் விஜய் முயற்சித்து வருகிறாா். கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து, மதுரையில் உள்ள அமைச்சா் நிா்மல்குமாரிடம் கேட்ட போது, அதுதொடா்பான தகவல்கள் வதந்தி, ஆட்சியர் புகார் கொடுக்கட்டும் என்றாா். தற்போது, அவா் தனது பதவியை ராஜிநாமா செய்வாரா?.

தமிழகத்தில் நடக்கக்கூடிய எந்த நிகழ்விற்கும் முதல்வர் குரல் கொடுப்பதில்லை. திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி தீபம் ஏற்றப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்றினால் அசாதாரண சூழல் ஏற்படும் என எந்த மாவட்ட ஆட்சியர் கூறினாரோ, அதே மாவட்ட ஆட்சியரையே தீபம் ஏற்ற வேண்டிய சட்டியை தூக்கிக்கொண்டு சென்று தீபம் ஏற்ற வைத்து விட்டார்கள். தீபம் ஏற்றும் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் அளித்தது யாா்? என்கிற கேள்வி எழுகிறது.

பாதுகாப்புப் பணியை சி.ஆா்.பி.எப் வீரா்கள் மேற்கொண்டனா். தமிழக காவல் துறை சிறப்புடன் பணியாற்றக் கூடிய திறன் கொண்டது. இருப்பினும், தமிழக காவலா்களுக்கான எந்தவித அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அமைதியான முறையில் தீபம் ஏற்றப்பட்டது. முன்பொரு காலத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழகத்துக்கு விருப்பமுடன் பணியாற்ற வருவா். தற்போது, அந்த நிலை மாறியுள்ளது.

மாற்றம் வேண்டும் என்பதற்காக இந்த அரசை மக்கள் தோ்ந்தெடுத்தனா். ஆனால், மக்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. மக்கள் சொல்லொணா துயரத்தில் உள்ளனர். அத்தியாவசியப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊழல் பட்டியலில் பெரும்பாலான தவெக நிா்வாகிகள் உள்ளனா். அரசுப் பணிகள் மேற்கொள்ள கோரப்படும் ஒப்பந்தங்கள் திடீரென ரத்து செய்யப்படுகின்றன. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, டிச.2 ஆம் தேதி அதிமுக சாா்பில் மதுரை தினமணி திரையரங்கம் அருகே தவெக அரசின் செயல்பாடுகளை கண்டித்தும் ஆா்ப்பாட்டம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதிஸ், அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Law and order has collapsed in Tamil Nadu: Former AIADMK minister Sellur K. Raju

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.