முகப்பு

காங்கிரஸ் தலைமையிடம் அப்போவே சொன்னேன்: ப.சிதம்பரம்

காங்கிரஸ்-திமுக இடையிலான விரிசல் மற்றும் தமிழகத்தில் அரசு அமைக்க தவெகவுக்கு ஆதரவு அளித்தது குறித்து ப. சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்து குறித்து...

36 வினாடிகள் முன்பு
காங்கிரஸ் தலைமையிடம் அப்போவே சொன்னேன்: ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் - கோப்புப்படம்
பகிர்:

திமுகவை நம் பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என திமுக உடனான கூட்டணி உறவு மற்றும் தவெக ஆட்சி அமைப்பு தொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கு முன்பே தனது கருத்தை சுட்டிக்காட்டியதாக ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்-திமுக இடையிலான விரிசல் மற்றும் தமிழகத்தில் அரசு அமைக்க தவெகவுக்கு ஆதரவு அளித்தது குறித்து ப. சிதம்பரம் செய்தியாளர்களுடன் பேசுகையில், திமுகவுக்கு மக்களவையில் 22 இடங்களும், மாநிலங்களவையிலும் குறிப்பிடத்தக்க பலங்கள் உள்ளதை சுட்டிக்காட்டி, அந்த கட்சியுடனான கூட்டணியைத் தொடருமாறு காங்கிரஸ் தலைமைக்கு முன்பே தனது கருத்தை சுட்டிக்காட்டினேன்.

தமிழகத்தில் சட்டப்பேரவை கலைக்கப்படுவதையோ அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதை தடுப்பதற்காக, தவெக அரசு அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது சரியான முடிவு என நியாயப்படுத்திய சிதம்பரம்; அதேசமயம், அதற்கு பிறகு நடந்த சில நிகழ்வுகளால் திமுகவுடனான உறவு குலைந்துவிட்டதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

Advertisement

Advertisement

இந்த அரசியல் நிகழ்வுகள் தொடர்பான சில விஷயங்களை கட்சிக்குள் மட்டுமே பேச முடியுமே தவிர, அவற்றை பொதுவெளியில் கூற முடியாது என சிதம்பரம் கூறினார்.

இதனிடையே, நான் கொள்கை ரீதியாக ஒருவரை எதிர்ப்பை தெரிவிப்பேனே தவிர, தனிப்பட்ட முறையில் நான் என்னைக்குமே எந்த அரசியல் கட்சி தலைவரையும் விமர்சித்தது கிடையாது. எல்லா அரசியல் கட்சி தலைவர்களோடும் நல்ல உறவை கொண்டிருக்க வேண்டும். அதுதான் முதிர்ச்சியான அரசியல் என்று நினைப்பவன் நான் என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார்.

Senior Congress leader P. Chidambaram revealed that he had advised the Congress leadership well in advance to maintain its alliance with the DMK...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.