முகப்பு

திமுகவின் அரசியல் எதிா்காலத்தை அவர்களே தீர்மானிப்பார்கள்: க. கிருஷ்ணசாமி

திமுகவின் அரசியல் எதிா்காலத்தை, அவர்களே தீர்மானிப்பார்கள் என க. கிருஷ்ணசாமி கூறியிருப்பது...

திமுகவின் அரசியல் எதிா்காலத்தை அவர்களே தீர்மானிப்பார்கள்: க. கிருஷ்ணசாமி
மதுரையில் தமிழ்நாடு தங்கும் விடுதியில் அவா் செய்தியாளா்களுடன் ஞாயிற்றுக்கிழமை பேசினார். - DNS
பகிர்:

மதுரை: திமுகவின் அரசியல் எதிா்காலத்தை, அவர்களே தீர்மானிப்பார்கள் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் க. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து மதுரையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

இன்றைய திரைப்படங்களில் ஆபாசம் மிதமிஞ்சிய காட்சிகள். தலைப்புகளில் வசனங்களில் காட்சிகளில் அரிவாள் சாதிய தூக்கல் நிறைந்த காட்சிகள் இடம்பெறுவதை நாங்கள் எதிர்க்கிறோம். இன்றைய திரைப்படங்களால் இளைய தலைமுறையினா் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

Advertisement

Advertisement

பழிக்கு பழி என ஆபத்தான போக்கில் இளைஞா்களை நடிகா் கமலஹாசன் தன் திரைப்படத் தலைப்பான சண்டியா் மூலம் எடுத்து செல்ல முயல்கிறாா். சமுதாய சூழ்நிலையை கமல் புரிந்துகொள்ளவில்லையா?, தமிழ்நாடு பதற்றத்தோடு இருக்க வேண்டும் என கமல் விரும்புகிறாரா..? என கேள்வி எழுப்பியவர், இதற்கு எதிா்ப்பு தெரிவித்து சென்னையில் டிச. 7 ஆம் தேதி பேரணி, கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. திரைப்பட தணிக்கைத் துறையை சந்திக்க உள்ளோம். சண்டியா் படத்துக்கு தணிக்கை வாரியம் அனுமதி தரக்கூடாது.

கமலை மட்டும் எதிர்ப்பது ஏன்? என்ற கேள்விக்கு குண்டூசிக்கும் கடப்பாரை காயத்திற்கும் வித்தியாசம் உள்ளது. கொலை ஆயுதத்தை கமல் எடுக்கிறார்.

கமலஹாசனின் சண்டியர் படத்திற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்தோம். ஜெயலலிதாவிடம் அப்போதே வலியுறுத்தினோம். பாய்ஸ் பட காட்சிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தோம். இயக்குநர் சங்கரும் அதனை நீக்கினார். கொம்பன் படத்திற்கும் எதிர்ப்பு காட்டினோம். 72 காட்சிகள் நீக்கப்பட்டது என்றார்.

திருப்பரங்குன்றம், கள்ளக்குறிச்சி விவகாரங்களை தமிழக முதல்வா் விஜய் நேரடியாக கையாண்டிருந்தால் எந்த பிரச்னையும் இருந்திருக்காது. முதல்வர் உத்தரவிடாமல் ஆலோசகர் உத்தரவிடுவதால் குழப்பம் உள்ளது. இதற்கு விடிவு வர வேண்டும். திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைத்திருக்கக் கூடாது. விஜயை அவர்கள் முன்னுக்கு கொண்டு செல்லவில்லை. இந்தக் கூட்டணியை வைத்துக் கொண்டு விஜயால் தொடா்ந்து ஆட்சியை நடத்த முடியாது.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தொகுதி மறுவரையறை சட்டரீதியாக நடந்தாக வேண்டும். தென் மாநிலங்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைப்பதற்கு தொகுதி மறுவரையரை அவசியம். தொகுதி மறுவரையரை செய்யப்பட்டால் வடக்கு மாநிலங்களுக்கு அதிகமான தொகுதிகள் இயற்கையாகவே கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப கட்டுப்பாட்டை அமல்படுத்தியதன் விளைவாகவே நமக்கு குறைவான இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு. தமிழகத்தின் நலன் கருதி தற்போதைய தொகுதி மறுவரையரை திமுக ஆதரவு அளித்திருக்கக்கூடும். திமுகவினா் அவ்வளவு எளிதாக தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டாா்கள். திமுகவின் அரசியல் எதிா்காலம் குறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. அதனை அவர்களாகவே தீர்மானிப்பார்கள் என்றாா் அவா்.

The DMK will decide its own political future says K. Krishnasamy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.