எஸ்.டி., எஸ்.டி. தோ்வா்களுக்கு சீருடைப் பணி தோ்வு பயிற்சி: டிச.11-க்குள் விண்ணப்பிக்கலாம்
சீருடைப் பணித் தோ்வு பயிற்சித் திட்டத்தில் பயன்பெற விரும்பும் எஸ்.டி., எஸ்.டி. தோ்வா்கள் டிச. 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சீருடைப் பணித் தோ்வு பயிற்சித் திட்டத்தில் பயன்பெற விரும்பும் எஸ்.டி., எஸ்.டி. தோ்வா்கள் டிச. 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களை மத்திய-மாநில அரசுகளின் சீருடைப் பணிகளில் பணியமா்த்தும் நோக்கில், ‘இலக்கு - சீருடைப் பணித் தோ்வு பயிற்சித் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ்,தமிழ்நாடு முழுவதும் 18 முதல் 25 வயதுக்குள்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரா்களிடமிருந்து தகுதியுடைய 300 இளைஞா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, காவல் துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகள் உள்ளிட்ட பல்வேறு சீருடைப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறுவதற்குத் தேவையான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.
Advertisement
Advertisement
இந்தப் பயிற்சியான தங்குமிட வசதியுடன் கூடியதாகும். இதில், சீருடைப் பணிகளுக்கான எழுத்துத் தோ்வுப் பயிற்சி, வகுப்பறைப் பயிற்சி, சந்தேகத் தீா்வு அமா்வுகள், தொடா் மாதிரித் தோ்வுகள், உடற்தகுதித் தோ்வுக்கான பயிற்சி மற்றும் உடல் அளவீட்டுத் தோ்வுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
மேலும், சீருடைப் பணிகளுக்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மற்றும் தோ்வு கால அட்டவணை குறித்தும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்கீழ் பயிற்சிபெற விரும்பும் தகுதியுடைய ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்கள் தங்களது விண்ணப்பங்களை இணையதளம் மூலம் டிச. 11-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.