மு.க. ஸ்டாலினுடன் பேசியது என்ன? காங்கிரஸ் அதிகாரப்பூர்வ பதிவு!
மு.க. ஸ்டாலினுடன் பேசியது தொடர்பாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளது குறித்து...

தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும் என ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கை வைத்ததாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப்பேசியது குறித்த புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ளது. இத்துடன் காங்கிரஸ் கட்சி பதிவிட்டுள்ளதாவது:
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு கோரிக்கை வைத்தோம் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
summary