முகப்பு

மு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொகுதி மறுவரையறை குறித்து பேச்சுவார்த்தை...

26 வினாடிகள் முன்பு
மு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!
பேச்சுவார்த்தையின்போது... - எக்ஸ்
பகிர்:

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொகுதி மறுவரையறை குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் இல்லத்துக்கு வந்த இந்தியா கூட்டணித் தலைவர்களை அவர் வாசலுக்கே வந்து வரவேற்றார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மமதா பானர்ஜி, வேணுகோபால் உள்ளிட்டோரை வாசலுக்கே வந்து வரவேற்றார்.

Advertisement

Advertisement

இப்பேச்சுவார்த்தையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், கேரள முதல்வர் வி.டி. சதீசன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா நாளை தாக்கலாகும் நிலையில், மு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜகவின் மசோதாவுக்கு திமுக தலைவர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அவரின் முடிவை மாற்ற இந்தியா கூட்டணித் தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இப்பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

summary

INDIA alliance leaders hold talks with M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.