மு. க. ஸ்டாலினை மாலை 4 மணிக்கு சந்திக்கும் இந்தியா கூட்டணித் தலைவர்கள்!
திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை சந்திக்கவுள்ள இந்தியா கூட்டணித் தலைவர்கள்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இந்தியா கூட்டணித் தலைவர்கள் இன்று (நவ. 29) மாலை 4 மணிக்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை சந்தித்துப் பேசவுள்ளனர்.
தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு, ஆதரவளிக்கவுள்ளதாக திமுக நேற்று அறிவித்திருந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்துப் பேசவுள்ளனர்.
மேலும், கேரள முதல்வர் வி.டி. சதீசன், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் ஸ்டாலின் உடனான சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.
Advertisement
Advertisement
தொகுதி மறுவரையறை மசோதா ஆதரவு நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி இன்று மாலை 4 மணிக்கு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்கிறது.
இந்தியா கூட்டணித் தலைவர்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் இல்லத்திற்கு வருகை தர உள்ள நிலையில், அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
இதனிடையே, இந்தியா கூட்டணித் தலைவர்கள் சென்னைக்கு வந்துள்ள நிலையில் என். ஆர் இளங்கோ, கலாநிதி வீராசாமி, வில்சன் ஆகியோருடன் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மமதா பானர்ஜி, கே.சி. வேணுகோபால், டி.கே. சிவகுமார், வி.டி. சதீசன், ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் தனி விமானம் மூலம் சென்னை வந்துள்ளனர்.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரின் தாயார் தயாளு அம்மாளை சந்திக்க சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.