மாலை 5 மணிக்கு மேல் உங்க தலைவரை எழுப்பி ரீல்ஸ் போட முடியுமா? தவெக எம்எல்ஏவுக்கு அதிமுக கேள்வி!
தவெக எம்எல்ஏவுக்கு அதிமுக கேள்வி எழுப்பியது பற்றி....
மாலை 5 மணிக்கு மேல் உங்க தலைவரை எழுப்பி ரீல்ஸ் போட முடியுமா? என தவெக எம்எல்ஏவுக்கு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், புற நோயாளிகள் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு மருத்துவர், அதுவும் இரவுநேரப் பணி பார்க்கும் மருத்துவர் ஓய்வு எடுப்பது இயல்பு என்பது கூட தெரியாமல், தனது ஆச்சரியக்குறித் தனத்தை காட்ட டாக்டரை எழுப்பி அறிவுரை ரீல்ஸ் எடுத்துள்ளார் தவெக ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன்!
மக்கள் மேல அவ்வளவு அக்கறை இருந்தால், இதே மாதிரி போய் மாலை 5 மணிக்கு மேல் உங்க தலைவரை, தமிழக முதல்வரை எழுப்பி ரீல்ஸ் போட முடியுமா?
Advertisement
Advertisement
டெங்கு காய்ச்சலுக்கு முழு கை சட்டை போடவும் என்ற அறிய கண்டுபிடிப்பை கூறிய சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், எங்கள் பொதுக்குழுவில் மூக்கை நுழைப்பது போல இந்த எம்எல்ஏ-வுக்கு கண்டனம் தெரிவிப்பாரா? எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அரசு மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்த மருத்துவரை ஓய்வில் இருந்து எழுப்பி கேள்வி கேட்டதாக தவெக எம்எல்ஏ சரவணன் மீது சர்ச்சை எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
AIADMK has questioned a TVK MLA, asking: 'Can you wake up your leader after 5 PM and make him post reels?'
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.