மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் சாலைவலம்! மக்களை சந்திக்கும் 35 இடங்கள் எவை?
மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் சாலைவலத்தின் முழு விவரம்...
மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் இன்று சாலைவலம் மேற்கொள்ளவுள்ள நிலையில், 35 இடங்களில் மக்களைச் சந்திக்கவுள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமாரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று சாலைவலம் மேற்கொள்ளவுள்ளார்.
மாண்டூரில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சாலைவலத்தை தொடங்கும் முதல்வர் விஜய், மதுராந்தகத்தில் நிறைவு செய்கிறார். இந்த சாலைவலத்தின் போது 35 சந்திப்புகளில் பிரசார வாகனத்திலிருந்தபடி, மக்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
35 இடங்கள் எவை?
மாமண்டூர்
புக்கத்துறை சந்திப்பு
படாளம் சந்திப்பு
ஜானகிபுரம் சந்திப்பு
மேலவலம்பேட்டை சந்திப்பு,
கருங்குழி சந்திப்பு,
கருங்குழி பேரூராட்சி அலுவலகம்,
மதுராந்தகம் வடக்கு புறவழிச்சாலை நுழைவு,
மதுராந்தகம் தெற்கு புறவழிச்சாலை,
அய்யனார் கோவில் சந்திப்பு,
மோச்சேரி,
தண்டலம்,
பெரும்பாக்கம்,
கிளியாநகர்,
செம்பூண்டி,
கீழாமூர்,
பசுவங்கரணை,
ராமாபுரம்,
மோகல்வாடி,
எலப்பாக்கம்,
பொற்பணங்கரணை,
அணைக்குன்றம்,
கீழ்அத்திவாக்கம்,
மின்னல் சித்தாமூர்,
பெரும்பேர்கண்டிகை,
கடமலைப்புத்தூர்,
தென்பாக்கம் சந்திப்பு,
சோத்துப்பாக்கம்,
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் சந்திப்பு,
சரவம்பாக்கம்,
பெருவெளி,
முதுகரை,
வில்லவராயநல்லூர்,
மாம்பாக்கம்,
மதுராந்தகம்
சாலை வலத்தின்போது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்குச் சென்று முதல்வர் விஜய் தரிசனம் செய்கிறார்.
இந்த சாலைவலத்தின்போது, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கண்டிப்பாக பங்கேற்கக் கூடாது என்று கட்சியின் பொதுச் செயலரும் அமைச்சருமான என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த 25ஆம் தேதி மதுராந்தகத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, தவெக வேட்பாளருக்கு ஆதாரவாக முதல்வர் விஜய் பிரசாரம் செய்ததார்.
வருகின்ற அக். 4ஆம் தேதி மாலையுடன் பிரசாரம் நிறைவடையவுள்ள நிலையில், மதுராந்தகத்தில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை முதல்வர் விஜய் இன்று மேற்கொள்கிறார்.
Chief Minister Vijay’s roadshow in Maduranthakam! Which are the 35 locations where he will meet the public?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.