FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மதுராந்தகத்தில் தேநீர் கடையில் வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்!

மதுராந்தகத்தில் தேநீர் கடையில் முதியவர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் விஜய்...

மதுராந்தகத்தில் தேநீர் கடையில் முதல்வர் விஜய்... - X
பகிர்:

மதுராந்தகத்தில் தேநீர் கடையில் முதியவர்களுடன் கலந்துரையாடி முதல்வர் விஜய் வாக்கு சேகரித்தார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமாரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று சாலைவலம் மேற்கொண்டு வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாண்டூரில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சாலைவலத்தை தொடங்கிய முதல்வர் விஜய், மதுராந்தகம் தொகுதியில் சுமார் 35 கிராமங்களில் வாக்கு சேகரிக்கிறார்.

Advertisement

Advertisement

பிரசார வாகனத்தில் மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமாரவேலுடன் நின்றபடி, அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் மதுராந்தகம் தொகுதியில் திடீரென வாகனத்தை நிறுத்தி ஒரு டீக்கடைக்குச் சென்று அங்கிருந்த முதியவர்களுடன் உரையாடி வாக்கு சேகரித்தார். தேநீர் அருந்தியவாறே அவர் வாக்கு சேகரித்தார்.

அதேபோல ஒரு வயல்வெளியில் இறங்கி அங்கு வேலை செய்துவந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தார். டிராக்டர் ஓட்டியும் விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

முதல்வர் விஜய் வருகையையொட்டி மதுராந்தகத்தில் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

summary

CM vijay campaign in madhuranthagam constituency byelection

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments