FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அக்டோபர் 2 தொடர் விடுமுறை: கோவை பேருந்து நிலையத்தில் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அதிரடி ஆய்வு

கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டது தொடர்பாக...

கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் நேரில் சிரமங்கள் அல்லது குறைகள் உள்ளனவா என கேட்டறிந்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன். - டிஎன்எஸ்
பகிர்:

கோவை: காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு கோவையில் பேருந்து சேவை தொடர்பாக, போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு மக்கள் சிரமமின்றி மற்றும் பாதுகாப்பாகத் தங்களின் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு சிறப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் கிராமப் பகுதிகளுக்கும் அரசுப் பேருந்துகளை இயக்குவதில் ஏதேனும் இடையூறு உள்ளதா, பயணிகளுக்குச் செய்யப்பட்டிருக்கும் அடிப்படை வசதிகள் மற்றும் சிறப்புப் பேருந்துகளின் இயக்க நிலவரம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வியாழக்கிழமை இரவு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேரில் ஆய்வு

ஆய்வின் போது, பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த பயணிகளிடம் நேரில் சென்று பேசினார். "பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருகின்றவா? ஏதேனும் சிரமங்கள் அல்லது குறைகள் உள்ளனவா?" என்று பயணிகளிடம் கேட்டறிந்ததோடு, அவர்களின் கோரிக்கைகளையும் கனிவோடு கேட்டறிந்தார்.

மக்கள் வழக்கம்போல் கூட்ட நெரிசலின்றி அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதை உறுதி செய்ய அதிகாரிகளுக்குத் தகுந்த அறிவுரைகளை வழங்கிய அமைச்சர், விடுமுறைக் காலத்தில் பயணிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

October 2nd long weekend: Minister Vijay Tamilan Parthiban conducts a surprise inspection at the Coimbatore bus stand

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments