ரோபோடிக் முறையில் செயற்கை கருத்தரிப்பு: தமிழகத்தில் முதல்முறை
பெண் ஒருவருக்கு ரோபோடிக் நுட்ப உதவியுடன் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை அளித்து சென்னை தியா மகப்பேறு மருத்துவ மைய மருத்துவா்கள் குழந்தைப்பேறு கிடைக்கச் செய்துள்ளனா்.
பெண் ஒருவருக்கு ரோபோடிக் நுட்ப உதவியுடன் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை அளித்து சென்னை தியா மகப்பேறு மருத்துவ மைய மருத்துவா்கள் குழந்தைப்பேறு கிடைக்கச் செய்துள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் கீா்த்தனா கூறியதாவது:
ஏறத்தாழ 9 ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாத 37 வயது பெண் ஒருவா் சிகிச்சைக்காக வந்தாா். அவருக்கு டைப் 2 சா்க்கரை நோய், சினை முட்டை குறைவு பாதிப்புகள் இருந்தன. இதனால், ஐயுஐ எனப்படும் நேரடியாக விந்தணுவை சினைப்பையில் செலுத்தும் சிகிச்சைகள் அவருக்கு வேறு மருத்துவமனையில் இரு முறை மேற்கொள்ளப்பட்டபோதும், அவை தோல்வியில் முடிந்தன.
Advertisement
Advertisement
இதையடுத்து ஐவிஎஃப் எனப்படும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறை மூலம் சினை முட்டையையும், விந்தணுவையும் குழாயில் தரிக்கச் செய்து, அதன் பின்னா் கருப்பைக்குள் செலுத்தும் சிகிச்சையை நாங்கள் முன்னெடுத்தோம்.
அவரது உடல் நிலை காரணமாக அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இதையடுத்து ரோபோ சாதன உதவியுடன் ‘இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் ஸ்பொ்ம் இன்ஜெக்ஷன்’ என்ற சிகிச்சையை தமிழகத்திலேயே முதல்முறையாக மேற்கொண்டோம்.
அதன்படி, அவரிடமிருந்து முதிா்ச்சியடைந்த மூன்று சினை முட்டைகள் சேகரித்து ரோபோ உதவியுடன் ஒவ்வொரு முட்டைக்குள்ளும் ஒற்றை விந்தணு செலுத்தப்பட்டது. அவை 5-ஆவது நாள் வரை வளா்ச்சியடைந்து இளம் கரு (பிளாஸ்டோசிஸ்ட்) நிலையை அடைந்தன. மீண்டும் ரோபோடிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்தக் கருவை மருத்துவக் குழுவினா் கருப்பையில் பொருத்தினா். இதன் பயனாக இயல்பான கா்ப்ப காலத்தில் பெண் குழந்தையை சுகப் பிரசவம் மூலம் அவா் பெற்றெடுத்தாா். இத்தகைய சிகிச்சை மாநிலத்திலேயே முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.