இடைத்தோ்தலில் தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்: ஜி.கே.வாசன்
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் தவெகவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் தவெகவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.
காந்தி ஜெயந்தியையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு, அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, காமராஜரின் 51-ஆவது நினைவு தினத்தையொட்டி கிண்டியில் காமராஜா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு மலா் அஞ்சலி செலுத்தினாா்.
வெற்றி வாய்ப்பு அதிகம்: இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பெண்களின் முன்னேற்றத்துக்கு வழிவகை செய்யும் விதமாக மாநகரம், நகா்ப்புறம், புகா் மற்றும் மலைப் பிரதேச பகுதிகளில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயண திட்டமாக ‘வெற்றிப் பயணத் திட்டத்தை’ முதல்வா் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்துள்ளாா். இது, வரவேற்கக்கூடிய ஒன்றாகும்.
Advertisement
Advertisement
இந்திய தலைமைத் தோ்தல் ஆணையரின் செயல்பாட்டில் மக்களிடையே நாளுக்கு நாள் சந்தேகம் வலுபெற்று வருகிறது. எந்தொரு கோட்பாடுமின்றி தோ்தல் ஆணையம் செயல்பட்டால், தோ்தல்கள் ஜனநாயக முறையில் நடைபெறாது.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்த குறைந்த நாள்களிலேயே அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகப்படியாக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், தவெகவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமுள்ளது’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.