FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தங்கம் வென்ற தமிழக கிரிக்கெட் வீரருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை..! முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் பங்காற்றிய தமிழக வீரருக்கான ஊக்கத்தொகை குறித்து...

வாஷிங்டன் சுந்தர், முதல்வர் விஜய் - படங்கள்: ஏபி, சிஎம்ஓ தமிழ்நாடு
பகிர்:

ஆசிய விளையாட்டில் இந்திய கிரிக்கெட் அணி தங்கம் வென்றது. இதில் பங்காற்றிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

கிரிக்கெட் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகள், ஃபீல்டிங்கில் 2 கேட்ச் உடன் அசத்தினார். இவரது உழைப்பினைப் பாராட்டி தமிழக முதல்வர் விஜய் கூறியிருப்பதாவது:

ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 இலட்சம் வழங்கப்படும்.

அவரது வெற்றி இளைய தலைமுறையினருக்கு புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். வாஷிங்டன் சுந்தர் அவர்கள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!

summary

Rs. 75 lakh cash incentive for gold-winning Tamil Nadu cricketer! Chief Minister Vijay announces!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments