FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஏரியூரில் மின்வேலியில் சிக்கி இளைஞர் பலி: தொடர்புடைய நபர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்

ஏரியூர் அருகே மின்வேலியில் சிக்கி இளைஞர் பலியான விவகாரத்தில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டடிருப்பது பற்றி..

ஏரியூர் அருகே அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி இளைஞர் பலியான விவகாரத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்யக்கோரி ஏரியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டுள்ள உறவினர்கள்.
பகிர்:

ஏரியூர் அருகே மின்வேலியில் சிக்கி இளைஞர் பலியான விவகாரத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்யக்கோரி ஏரியூர் காவல் நிலையத்தின் முன்பு இளைஞரின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே கூர்க்காம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் மகன் ஸ்ரீதர் (24). இவர்,ஏரியூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 29 ஆம் தேதி இரவு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற ஸ்ரீதர் காணாத நிலையில், அவரின் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லையாம். இதுகுறித்து ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் கடந்த 1 ஆம் தேதி கூர்க்காம்பட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே தங்கவேல் என்பவருக்கு சொந்தமான நிலக்கடலை தோட்டத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பலியாகி கிடப்பதாக ஏரியூர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

பலியான ஸ்ரீதர்.

தகவலின் பேரில் நிகழ்விடத்திற்குச் சென்ற போலீஸார் உடலை மீட்டு கூராய்வுக்காக தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏரியூர் போலீஸார் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், கூர்க்காம்பட்டி பகுதியில் நின்றிருந்த இளைஞர் ஸ்ரீதரை அதே பகுதியைச் சேர்ந்த பவுன்ராஜ் (45) என்பவர் துரத்திய போது அருகிலுள்ள நிலக்கடலை தோட்டத்திற்குள் ஓடியதால் மின்வேலியில் சிக்கியதாக தெரியவந்தது. இதனை அடுத்து பவுன்ராஜை போலீஸார் கைது செய்து வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடையதாக நான்கு பேரைக் காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் இளைஞரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், தொடர்புடைய நபர்களை விசாரிக்காமல் வேறு நபர்களை விசாரிப்பதாகவும், சம்பந்தப்பட்ட உரிய நபர்களை கைது செய்ய வேண்டும் என ஏரியூர் காவல் நிலையம் முன்பு இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஏரியூர் நாகமரை செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த தகவல் அறிந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல், காவல் ஆய்வாளர் சுரேஷ், வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் இளைஞர் பலியான விவகாரத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு நபர்களை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்வதாகவும், சாலை மறியலைக் கைவிடக் கோரி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்படாததால் இளைஞரின் உறவினர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நீடிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

summary

Over a hundred relatives of the youth staged a road blockade (road roko) in front of the Eriyur police station, demanding the arrest of those involved in the incident where a youth died after getting caught in an electric fence near Eriyur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments