FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கிராம மக்கள் இணைந்து 2 கி.மீ. சாலை அமைப்பு! அடையாள ஆவணங்களை ஒப்படைக்க முடிவு!

சீர்காழி அருகே அரசு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாததால் அடையாள ஆவணங்களை அரசிடமே ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தது குறித்து...

கிராம மக்கள் இணைந்து தங்களுடைய சொந்த செலவில் 2 கி.மீ. சாலை அமைப்பு. - படம் - தினமணி
பகிர்:

சீர்காழி அருகே அரசு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாததால் அடையாள ஆவணங்களை அரசிடமே ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஒன்றியத்தில் சாமியம், சரஸ்வதி விளாகம், கொன்ன காட்டு படுகை, கீரங்குடி, பட்டிய மேடு, பாலுரான் படுகை, வடரங்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தெற்கு ராஜன் வாய்க்காலின் தென்கரையில் அமைந்துள்ள இந்த கிராமங்களை இணைப்பதற்கான 7 கி.மீ. தூர சாலை பழுதடைந்து மண் சாலையாக மாறியது.

தொடர் கோரிக்கையின் காரணமாக வடரங்கம் - கொன்ன காட்டு படுகை வரை 2 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. கொன்ன காட்டு படுகை - சரஸ்வதி விளாகம் இடையேயான 2 கி.மீ. சாலை மேம்படுத்தப்படாமல் மண் சாலையாக மாறியது. இதனால் கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும், பள்ளி கல்லூரி மாணவர்கள் கல்வி கற்பதற்காகவும், விவசாயிகள் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்தவும் கொள்ளிடம் மற்றும் சீர்காழி சிதம்பரத்திற்கு செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Advertisement

Advertisement

சாலையை சீரமைத்து தர வேண்டியும் புதிய பாலம் அமைக்க கோரியும் கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் யூனியன் அலுவலகம், தாலுக்கா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் நடையாய் நடந்து மனு கொடுத்து வந்தனர். ஆனால் மாறி மாறி வந்த அரசுகள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் இவர்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

இந்நிலையில் சிரமத்தில் இருந்து விடுபட தங்கள் சொந்த செலவில் சாலை அமைக்க முடிவு செய்த கொன்ன காட்டு படுகை கிராம மக்கள் வீட்டிற்கு ரூ. 2000 வரி வசூல் செய்து அதன் மூலம் முதற்கட்டமாக கிடைத்த ரூ. 5 லட்சத்தை கொண்டு 2 கி.மீ. தூரத்திற்கு பெட் மிக்ஸ் கலவை கொண்டு சாலைக்கான அடித்தளத்தை ஜேசிபி எந்திரங்கள் ரோடு ரோலர் ஆகியவற்றைக் கொண்டும் கிராம மக்கள் ஒன்றிணைந்து அமைத்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த ஒன்றிய ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கிராம மக்கள் அமைத்த சாலை தளத்தை பார்வையிட்டு சென்றார்களே தவிர அடுத்த கட்டம் தார் சாலையை தாங்கள் செய்து தருகிறோம் என்ற உறுதியை கூட கொடுக்கவில்லை. இதனால் மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்களை அரசும் அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளாததால் தங்களது ரேஷன், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை விரைவில் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மக்கள் தங்கள் சொந்த செலவில் சாலை அமைப்பது மகிழ்ச்சியை அளித்தாலும் அரசு ஆவணங்கள் ஒப்படைப்பு என்ற முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலை அமைக்கப்பட்ட பணியின்போது... - படம் - தினமணி
summary

Residents near Sirkazhi stated that they have decided to surrender their identity documents to the government because their demands have not been met.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments