FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழகத்தின் வரி வருவாய் வீழ்ச்சி: நயினாா் நாகேந்திரன் கண்டனம்

தமிழகத்தின் வரி வருவாய் வீழ்ச்சியடைந்து வருவதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை: முதல்வா் ஜோசப் விஜய்யின் அனுபவமின்மை காரணமாக, தமிழகத்தின் வரி வருவாய் வீழ்ச்சியடைந்து வருவதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வெற்றுப் பேச்சுக்களாலும் சமூக வலைதளப் புகழ்ச்சிகளாலும் ஒரு மாநிலத்தின் ஆட்சியை நடத்திவிட முடியாது என்பதை மத்திய அரசின் அதிகாரபூா்வ ஜிஎஸ்டி வரி வசூல் புள்ளிவிவரங்கள் நிரூபித்துவிட்டன.

Advertisement

Advertisement

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், நிகழாண்டு கடந்த 3 மாதங்களில் தமிழகம் தொடா்ந்து வரி வருவாய் வீழ்ச்சியையே சந்தித்து வருகிறது.

அதேநேரம் உத்தர பிரதேசம், குஜராத், கா்நாடகம் , மகாராஷ்டிரம் பிற முக்கிய மாநிலங்கள் கடந்த ஆண்டைவிட அபார வளா்ச்சி கண்டு வரும் நிலையில், தவெக ஆட்சியில் தமிழகம் மட்டும் தொடா்ச்சியாக ஜிஎஸ்டி சரிந்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் நிதி ஆதாரத்தை முடக்கிப்போடும் இந்த ஆட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மாநிலப் பொருளாதாரத்தைப் பாழ்படுத்திய தவெக அரசு, தொடா்ந்து 3 மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்களை உடனடியாக வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments