FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் திடீர் பள்ளம்! வாகன ஓட்டிகள் கடும் அவதி!

சென்னை பெரம்பூர் மில் சாலையில் 6 அடிக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி...

பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் திடீர் பள்ளம் - DIN
பகிர்:

சென்னை: பெரம்பூர் வீனஸ் பகுதியில் உள்ள பேப்பர் மில் சாலையில் திடீரென சாலையின் நடுப்பகுதியில் சுமார் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெரம்பூர் வீனஸ் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிகளவில் பயன்படுத்தி வரும் முக்கிய சாலையாக பேப்பர் மில்ஸ் சாலை உள்ளது.

இந்த சாலையின் நடுப்பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. சுமார் 6 அடி ஆழத்திற்கு ஏற்பட்டுள்ள இந்தப் பள்ளத்தால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Advertisement

Advertisement

குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தைக் கடந்து செல்லும்போது தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதி சாலையின் நடுப்பகுதியில் இருப்பதால், எதிரெதிர் திசைகளில் வரும் வாகனங்கள் ஒரே நேரத்தில் கடந்து செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத நேரங்களில் பள்ளம் சரியாக தெரியாமல் வாகன ஓட்டிகள் அதில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படலாம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு இந்தப் பள்ளம் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

சாலையின் நடுவே திடீரென ஏற்பட்டுள்ள இந்தப் பள்ளத்திற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், மேலும் பள்ளம் பெரிதாகாமல் தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பள்ளம் ஏற்பட்டுள்ள இடத்தில் உடனடியாக தடுப்புகள் அமைத்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை ஏற்படுத்துவதுடன், சாலையை விரைந்து சீரமைத்து பாதுகாப்பான போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பேப்பர் மில் சாலையின் நடுவே சுமார் 6 அடி ஆழத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

இதைத்தொடர்ந்து இதே போன்ற திருவிக நகர், பல்லவன் சாலை அருகே 9 அடி கொண்ட ராட்சச பள்ளம் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்டதால் தற்போது குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரிய அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து சாலைகளை சீர்படுத்தும் நடைமுறைகளை கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Sudden pothole on Perambur Paper Mill Road! Motorists face severe hardship

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments