FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தாராபுரம்: கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தம்!

கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது பற்றி...

கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தம் - x
பகிர்:

தாராபுரம் அடுத்த கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் எதிர்க்கட்சி முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தாராபுரம் தொகுதிக்குள்பட்ட கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் உள்ள தேர்தல் அலுவலர், தவெகவின் விசில் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தேர்தல் அலுவலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் ஒரு மணிநேரத்துக்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினருடன் தேர்தல் அலுவலர்களும், காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

summary

Dharapuram: Voting halted at Kozhinjivadi polling station!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments