FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னை எழும்பூரில் செவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!

சென்னை எழும்பூரில் நடைபெற்ற செவிலியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதைப் பற்றி...

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள். - ஏஎன்ஐ
பகிர்:

சென்னை எழும்பூரில் நடைபெற்ற செவிலியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை அதிகாலை தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பணிப் பாதுகாப்பு, சமவேலைக்கு சம ஊதியம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளா் சங்கத்தினர் சென்னையில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எழும்பூர், ராஜரத்தினம் திடல் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்று, கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர். இந்தப் போராட்டத்துக்கு திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் ஆதரவு தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இடைநிலை சுகாதாரப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரமும் ஊதிய உயர்வும் அரசு வழங்க வேண்டும். செவிலியர்களுக்கு வழங்கும் ரூ. 21,000 ஊதியம் போதுமானதாக இல்லை. இடைநிலை சுகாதார செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். இடைநிலை சுகாதாரப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு என முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுத் தரப்பில் செவிலியர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, சில நிர்வாகிகளை போலீஸார் திருவல்லிக்கேணியில் ஒரு மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தகவலறிந்ததும் நிர்வாகிகளை விடுவிக்கக் கோரி போராட்டக்களத்தில் இருந்த செவிலியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார் அறிவுறுத்தியும், கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய போலீஸார் முயன்றனர். அப்போது கடும் எதிர்ப்பு வந்த காரணத்தால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இந்த நிலையில், செவிலியர்கள் போராட்டம் தற்காலிகமாக திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும், கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், அடுத்த மாதம் நவ. 3 ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

The nurses' hunger strike held in Chennai Egmore has been temporarily called off.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments