FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருவொற்றியூர் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கனிமொழி கண்டனம்!

5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவத்துக்கு கனிமொழி கண்டனம்.

கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:

திருவொற்றியூர் அருகே 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவத்துக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவை உறுப்பினர் கனிமொழி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”சென்னை திருவொற்றியூர் அருகே வடமாநில தம்பதியின் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

Advertisement

Advertisement

கடந்த 5 மாதங்களாக இதுபோன்ற சம்பவங்கள் குறித்தும், பொறுப்பற்ற தவெக ஆட்சியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களை எண்ணியும் மனம் வருந்துகிறது.

வீண் விளம்பரத்திற்காக ஒரு சினிமாத்தனமான சிறப்புப் படையை உருவாக்கியதைத் தவிர, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய மருத்துவ மற்றும் சட்ட உதவிகளை வழங்குவதோடு, அவருக்கு நீதி கிடைப்பதையும், குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

summary

MP Kanimozhi has condemned the incident in which a 5-year-old girl was sexually assaulted near Thiruvottiyur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments